Thursday, June 2, 2016

உங்கள் குழந்தைகளை நல்லவராக்கும் ஃபார்முலா

!!!

நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும். கருவேலம் விதைச்சா ஆலமரம் வளராது. அதுபோலதான் குழந்தை வளர்ப்பும். குழந்தைப் பருவத்தில் ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும்போது, அந்த விஷயம் வாழ்நாள் முழுக்க மனசைவிட்டு அகலாமல் அப்படியே பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும். குழந்தைகளை மனிதத் தன்மையோடு வளர்ப்பது குறித்து,சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் கீர்த்தன்யாவிடம் பேசியபோது, குழந்தை வளர்ப்பின் மிக முக்கிய அம்சத்தை கையில் எடுத்தார்,

சென்ற ஆண்டு மட்டும் 30% நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அவர்களின் நண்பர்களின் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்கள். 7 – 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலானோர் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக தொல்லை செய்யப்பட்டுள்ளனர். 50% சதவிகிதத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வில் ஆசிரியர்களை ஏமாற்றி காப்பி அடித்துள்ளனர். இரக்கமும் கருணையும் பின்னுக்குத் தள்ளப்படும்போது மாணவ சமுதாயம் அரக்கர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், மரியாதை தெரியாதவர்களாகவும்தானே மாறும்? அடிபட்டுக் கிடக்கும் பிராணிகளை வீட்டுக்கு எடுத்துவந்து உதவ நினைக்கும் குழந்தையிடம் கோபம் காட்டாதீர்கள். உங்கள் நேரமின்மையினால் அவர்களின் இரக்க குணத்தை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.

இன்று பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஒரு நடமாடும் கௌரவ அடையாளமாகத்தான் உருவாக்க விரும்புகிறார்கள். விளைவு… எதிர்காலத்தில் உங்களையும் அவர்கள் உறவாக, உயிராக இன்றி பராமரிப்புப் பொருளாகவே பார்க்கவிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். பாசம் என்றால் என்னவென்று அறியாமல் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது, அதற்கான பொறுப்பை மதிப்பெண்களுக்கும், பணத்துக்கும், தனி மனித வெற்றிக்கும் முதல் இடத்தை தந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்த பெற்றோரே ஏற்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவர் மத்தியிலும் தனித்துத் தெரிய அவர்கள் நடத்தை, திறமைதான் காரணமாக இருக்க வேண்டுமே தவிர, உடுத்தும் உடை, உபயோகிக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள், படிக்கும் பள்ளி, கௌரவம், அந்தஸ்து போன்றவை அவர்களை அடையாளப்படுத்தக் கூடாது!’’

– பெற்றோர் மனசாட்சியினை உண்மை வார்த்தைகளால் உரசிய கீர்த்தன்யா, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும், அதைக் கையாளும் வழிகளையும் தொகுத்துத் தந்த அட்டவணை…

நடைமுறை

நமது கலாசாரத்துக்கு மாறாக மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சிகரமான உடைகளை சிறுமிகளுக்கு உடுத்திவிடுவது. வயதுக்கு வந்தபின் அதே மேற்கத்திய உடைகளை அணிய தடை போடுவது.

குழந்தைகள் விரும்பும் பொருட்களை அதன் அதிக விலை பற்றி யோசிக்காமல், கேட்டவுடன் வாங்கிக்கொடுத்து குழந்தைகளின் எதிர்பார்ப்பை வளர்த்துவிடுவது. பின்னர் குடும்ப நிதிநிலைமையில் இறக்கம் ஏற்படும்போது, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் போவது.

பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி… குழந்தைகளுக்கு எப்படிப் படிப்பது எனப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பது இல்லை. ஆனால், பள்ளியில் படிப்பது போதாதென டியூஷனுக்கும் அனுப்பி, எந்நேரமும் படி படி என தொல்லை கொடுப்பது. குழந்தைகள் விருப்பத்துக்கு படிப்பை தேர்வு செய்யாமல், உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது.

குழந்தைகள் முன்னிலையில், வீட்டுப் பெரியவர்கள் மற்றும் உறவினர்களை தவறாகப் பேசுவது, வீட்டு பணியாளர்களையும், காய்கறி விற்பவர், ஆட்டோ ஓட்டுநர் போன்ற தொழிலாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது.

உங்களுடைய கௌரவத்துக்காகவும், அடுத்தவர்களிடம் பெருமை பேசுவதற்காகவும் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என நிர்பந்திப்பது, விலைமதிப்புள்ள உடை, பொருட்களை மட்டுமே வாங்கிக் கொடுப்பது என, நாம் வசதி மிக்கவர், உயர்ந்தவர் எனும்  கருத்தை சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைப்பது.

பாதிப்பு

(1) சிறு வயதிலிருந்து உடுத்திவந்த உடைக்கு திடீரென தடைவரும்போது எது சரி, எது தவறு என மனதளவில் ஏற்படும் குழப்பம். (2) சக தோழிகள் இதுபோல உடை உடுத்திவரும்போது என்னுடைய சுதந்திரம் ஏன் பறிக்கப்படுகிறது எனும் கேள்வி. (3) பெற்றோரின் உடையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, என்னுடைய உடைகளை நானே தேர்வுசெய்தால் என்ன எனும் எண்ணம்.

இதுவரை கேட்ட பொருள் உடனுக்குடன் கையில் வந்ததை வைத்து சக நண்பர்கள் மத்தியில் கிடைத்த மரியாதை, தற்போது ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காமல், சக நண்பர்களிடம் அவமானப்படுவதால் ஏற்படும் மன உளைச்சல்.

படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படுவது. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவது. சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாமல் போவது.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது. சக மனிதர் களை மனிதராகப் பார்க்காமல் மட்டமாக நடத்துவது.

தன்னுடன் படிக்கும் சக மாணவர்களைக் காட்டிலும் நாம்தான் உயர்ந்தவர் எனும் எண்ணம் வலுப்பது, ஏழ்மையில் இருப்பவர்களை தாழ்வாக நினைப்பது. ஒரு கட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும்போது, தாழ்வு மனப்பான்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாவது.

தீர்வு

(1) குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை சிறுவயது முதலே எடுத்துச்சொல்லி வளர்ப்பது.  (2) குடும்பத்தின் பாரம்பர்யத்தையும், கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். (3) `என்னுடைய வயதுக்கு எனக்கான சரியான உடைகளை என்னால் தேர்வு செய்துகொள்ள முடியும், நீ என்னைப்போல் வளர்ந்ததும் உனக்கானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என உறுதியளியுங்கள்.

உங்கள் குழந்தை ஒரு பொருளை கேட்கும்போது அதன் அத்தியாவசியத்தையும், அநாவசியத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது மற்றும் சமயம் கிடைக்கும்போது அருகிலிருக்கும் ஏதாவது ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்று, வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்முன் காட்டி, இவர்களின் கையால் அவர்களுக்கு ஏதாவது பரிசளிக்கச் செய்வது போன்ற விஷயங்களால், பொருட்களின் அருமை மற்றும் உதவும் மனப்பான்மை என இரண்டு குணங்களையும் வளர்க்க முடியும்.

(1)படிப்பு விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக கண்டிக்கவும் கூடாது, கண்டிக்காமல் விடவும் கூடாது. பக்குவமாக எடுத்துச் சொல்லவும். (2) குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தாய்மாமன், சித்தப்பா, சித்தி போன்ற மூன்றாம் தரப்பினர் மூலம் படிப்பின் அவசியத்தை ஒரு தோழமையுடன் எடுத்துச்சொல்லி புரிய வைக்கலாம்.

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கரடியாகக் கத்திப் புரியவைக்க முடியாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கு நாமே சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஏனெனில், கண்ணால் பார்ப்பதைத்தான் உடனுக்குடன் மனதில் வாங்கிக்கொள்வார்கள்.

மொழியை மொழியாக மட்டுமே பதிய வையுங்கள். 7 வயது வரை குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக் காமல் அக்கம்பக்கத்தில் உள்ள வேற்று மொழியாளர்களிடம் பேசவைப்பது என குறைந்தது ஐந்து மொழிகளையாவது கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள்.

தலைமுடிப் பராமரிப்புக்கு சில யோசனைகள்…

  !

எலுமிச்சம் பழம் அளவு மருதாணி இலை விழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து, ஒரு நாள் வெயிலில் காய வைத்துவிட வேண்டும். பிறகு அடுத்த நாள் அதை நன்கு காய்ச்சி, மணல் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து எடுத்து கொண்டு தினமும் தலைக்கு தடவி வர முடி கருமை பெற்று நன்கு வளரும்.

தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு உபயோகிக்காமல் சிகைக்காய் தூள் தேய்த்துக் குளிக்க வேண்டும். முடி  மினுமினுப்பாக மாறும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காக்கைக் கொல்லி விதையை அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, பேன் தொல்லை நீங்கும்.

சாமந்திப் பூவை சூட்டிக் கொள்ள தலைமுடி உதிர்வு நிற்கும். பேன், பொடுகு தொல்லையும் நீங்கும்.

30 செம்பருத்திப் பூவை எடுத்து வந்து, நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாதுகாத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி வர, முடி நன்கு வளரும்.

1 கப் புளித்த தயிரில் நான்கு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர, முடி நன்கு செழித்து வளரும். மூன்று நாள்களுக்கு ஒருமுறை என்று நான்கு நாள்கள் குளித்தால் போதுமானது.

அதிமதுரப் பொடியைப் பாலில் குழைத்துக் கொதிக்க வைத்து நன்றாய் தளதள என்று கொதித்ததும் இறக்கி ஆற வைத்து இளம் சூட்டில் தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இதுபோன்று செய்து வர தலைமுடி உதிர்தல் நின்று நன்கு செழித்து வளரும். வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.

– ரிஷி.

47 வகையான நீர்நிலைகள் - தெரிந்துகொள்வோம் :- 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது 03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை 08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது 09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் 10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் 11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு 12. கடல் -(Sea) சமுத்திரம் 13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர் 14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு. 15. கால் - (Channel) நீரோடும வழி 16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி 17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை 18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை 19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை 20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம். 21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு 22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று 23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை. 24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு 25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் 26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை. 27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு 28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை 29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை 30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம் 31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம் 32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை. 33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் 34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும் 35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம் 36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம் 37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு 38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும் 39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு. 40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு 41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை 42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம் 43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு 44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது 45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் 46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம் 47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

47 வகையான நீர்நிலைகள் - தெரிந்துகொள்வோம் :-

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

உளவியல் ஆலோசனை: சொல்லாத காதல் !!!


வாழ்க்கையின் ஓட்டமும் உறவின் இயக்கமும் நம் மனத்தின் கட்டுகளுக்குள் அடங்காதவை. எந்தக் கணத்தில் அது எந்தத் திசையில் நகரும் என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையும் உறவும் ஆழ்மன சக்திகளின் வெளிப்பாடுகள். ஆழ்மனம் நம் மேல்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆகவே வாழ்க்கை ஓட்டமும் உறவின் இயக்கமும்கூட நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் மேல்மனம் சார்ந்தவை. அதனால் மேல்மனத்தின் எல்லைகளுக்குள் வாழ்க்கையும் உறவுகளும் அடங்குவதில்லை. நம் மேல்மனத்தைத்தான் ‘நான்’ என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். இந்த நிலை இருக்கும்வரை வாழ்க்கையும் உறவுகளும் சிக்கல் நிரம்பியிருப்பது தவிர்க்க முடியாதது. ஆழ்மனத்தைப் பற்றிய பயங்களிலிருந்து விடுபட்டு நம் ஆழ்மனமும் நாம்தான் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையும் உறவுகளும் முழுமை அடைய முடியும். அவற்றின் இலக்கணங்களும் நமக்குப் புரியவரும்.

பொறியியல் பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என் நெருங்கிய உறவினரின் மகளைச் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். வருடா வருடம் ஊர்த் திருவிழாவில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியது இல்லை. அவள் தற்போது என்ன செய்கிறாள் என்ற விவரத்தை அறிய உறவினர் ஒருவரிடம் விசாரித்தேன். உடனே தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக அவன் கூறினான். அந்தப் பெண்ணைப் பற்றி இனி நான் எதையுமே விசாரிக்கக் கூடாது என்றான். அது மட்டுமல்லாமல், தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் தெரு முழுவதும் கூறியுள்ளான். இப்போது என்ன செய்வதென்று புரியாமல் நான் இருக்கிறேன். அந்தப் பெண்ணிடம் சென்று என் விருப்பத்தைத் தெரிவிக்கலாமா? இல்லை விட்டுவிடலாமா? ஒரு பெண்ணால் எனக்கும் அவனுக்கும் இடையே மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறேன். நான் மிகுந்த மனக் குழப்பத்தில் உள்ளேன்.

தொடக்கத்திலிருந்து இதுவரை எல்லாமே உங்களுக்குள்ளே மட்டும்தான் நடந்துவந்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவளைப் பார்த்துவந்திருக்கிறீர்கள். ஆனால் பேசியது இல்லை. கடைசியில்கூட அவளைப் பற்றி வேறு யாரிடமோ விசாரித்திருக்கிறீர்கள். அவர் உங்களை இன்னும் குழப்பிவிட்டிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதும் உங்களுக்குத் தெரியாது. அவளைக் காதலிப்பதாகத் தெரு முழுவதும் அவர் சொல்லியிருப்பதுகூட உண்மைதானா என்று தெரியாது. இதில் அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றிக்கூட அந்த உறவினர் சொல்வதுதான் உங்களுக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு முற்றிலும் தெரியாது. இதுதான் நிலைமை.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் விஷயமாக அந்த உறவினருடன் மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறீர்கள். அதுவும் உங்கள் மனத்தில்தான்.

இப்படி உங்கள் வாழ்க்கையை நீங்கள் உங்கள் மனத்தில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு எந்த முடிவும் எடுக்காமல் இருங்கள். இப்போது நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது மேலும் குழப்பத்துக்குள்தான் உங்களை இட்டுச் செல்லும். முதலில் உங்கள் மனத்தில் உங்களைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் ஓரளவுக்காவது தெளிவு வரட்டும். அதன் பிறகு ஆழமாகச் சிந்தித்து முடிவெடுங்கள்.

நான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்க்கிறேன். என் பெற்றோர் எனக்குப் பார்த்து, நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் நிச்சயமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. எனவே கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறோம் அவ்வப்போது சந்திக்கவும் செய்வோம். இப்படியாக எங்கள் வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் நெருக்கமானபோதுதான் அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவந்தது. அந்த நாளுக்குப் பிறகு என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். அதன் பின்தான் அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதே எனக்குப் புரியவந்தது. பெற்றோருக்குக் கட்டுப்பட்டுத்தான் அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்திருக்கிறாள். ஆனால் நான் அவளை ஆழமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து இப்போது மீண்டும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறாள். ஆனால் இப்போதும் அவளுடைய பெற்றோர்தான் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன். நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை. நான் என்ன செய்ய?

‘நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை,’ என்கிறீர்கள். உங்கள் இதயம் அவள் வேண்டும் என்று சொல்கிறது. உங்கள் மனம், அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்னும் உண்மையை எதிர்கொண்டு நிற்கிறது. அவள் திருமணமே வேண்டாம் என்றுதான் நினைக்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தினால்தான் திருமணத்துக்கே சம்மதித்திருக்கிறாள். இந்த நிலையில் நீங்கள் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும்? அவளுடைய பண்புகளுக்காகவும் குணங்களுக்காகவும் அவளை ஏற்றுக்கொண்டு வாழ நீங்கள் தயாரா? எவ்வளவு நாட்கள் இந்த மாதிரி வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் உணர்ச்சிகளும் சிந்தனைப் போக்கும் எனக்குப் புரிகிறது. திருமணம் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகும் உறவு. அதில் உணர்ச்சிபூர்வமான முடிவுகளுக்கு இடம் உண்டா? அவளை இழக்க நீங்கள் தயாராக இல்லை. ஆனால் இதில் அவளுடைய விருப்பம் என்ன? அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? உறவு என்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

இவ்வளவு விஷயங்கள் பற்றியும் நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் உணர்ச்சிகளின் அடிப்படையில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கவனத்துடன் செயல்படுங்கள்.