🌜 கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🌛
🎭 சித்தயோகி சாமய்யர் 🎭
கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் 10.கி,மீ,தொலைவில் உள்ள கணுவாய் என்னும் ஊருக்குச் சென்றால்.அங்கிருந்து 2.கி,மீ,தூரத்திலுள்ள பன்னிமடை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
இவர் பிறந்ததும் ஜீவசமாதி ஆனாதும் ஆகஸ்ட் 15-ல் தான்,
➖➖➖➖➖➖
🎭 வெள்ளியங்கிரி சுவாமிகள் 🎭
கோவைக்கு மேற்கே 30.கி,மீ,தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா சென்டருக்கு சற்று முன்னதாக இருக்கும் முள்ளங்காட்டில் இவரது ஜீவசமாதியும்,ஆசிரமும் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 கணபதி சுவாமிகள் 🎭
கோவைக்கு அருகிலுள்ள சூலூர் ராசிபாளையம் என்னும் கிராமத்தில் 30-5-1913-ல் பிறந்தார்,இவர் ஜீவசமாதி உடையாம் பாளையத்தில் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 குமாரசாமி சித்தர் 🎭
கோவையிலிருந்து 40.கி,மீ,தொலைவிலுள்ள பூராண்டான் பாளையத்தில் பஞ்சவேல் முருகன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 கோடி சுவாமிகள் 🎭
இவரது ஜீவசமாதி பொள்ளாச்சியிலிருந்து 20,கி,மீ, தொலைவில் உள்ள புரவிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஜமீன்தார் அரண்மனை வளாகத்தில் உள்ளது,
➖➖➖➖➖➖
🎭 மகான் கோபால் சுவாமிகள் 🎭
உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி சாலையில் செடிமேடு என்னும் இடத்தைத் தாண்டி இருக்கும் லட்சுமணபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிச் சென்றால் வரும் சித்தவாடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது.
➖➖➖➖➖➖
🎭 அழுக்குச் சுவாமிகள் 🎭
பொள்ளாச்சிக்கு அருகே ஆனைமலை தாண்டி உள்ள வேட்டைக்காரன் புதூரில் ஓடும் உப்பாற்றங்கரையில் வேட்டைக்கார சுவாமி கோயிலுக்கு வடபுறம் இவரது ஜீவசமாதி உள்ளது,
➖➖➖➖➖➖
கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் முடிவுற்றது,
🙏🏻 நன்றி 🙏🏻
🌹 நற்பவி 🌹
Monday, February 24, 2020
கோவை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🌛
Thursday, February 13, 2020
பிரண்டையின்
பிரண்டையின் மருத்துவக்குணங்களைத் தெரிந்துகொள்வோமா?
கால்சியம் குறைவு, நினைவுத்திறன் இல்லை, உடலில் மந்தம், மூலத்தால் அவதி, எலும்புக்குறைபாடு இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளை மொத்தமாக சந்தித்தாலும் தீர்வுக்கு ஒன்றை பயன்படுத்தினாலே போதும்... அதன் பெயர்தான் பிரண்டை
ஹைலைட்ஸ்எலும்பு முறிவு பிரச்னைக்கு மாத்திரைகளை விட வீரியமாக செயல்படுகிறது பிரண்டை
மந்தமாக இருக்கும் குழந்தையின் மூளையைத் தட்டி எழுப்புவதற்கு பிரண்டைத்துவையல் போதும்.
ஆண்மையைப் பெருக்கும் அற்புத மருந்தாக இருக்கிறது பிரண்டை உப்பு.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். மாத்திரைகள் இல்லாமல் மருத்துவர் உதவி இல்லாமல் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும். மூலிகை பொருள்களை யும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கி யமானவை பிரண்டை.
பிரண்டை என்றால் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மருத்துவர்களும் இன்று பிரண்டையின் முக்கியத்து வத்தை உணர்த்துவதாலோ என்னவோ மக்கள் பிரண்டையை நோக்கி படையெடுக்கதொடங்கியிருக்கிறார் கள். சாதாரணமாக பத்துரூபாய்க்கு கிடைக்கும் பிரண்டையின் பயன் பலநூறு நோய்களை வரவிடாமல் தடுக் கும் என்கிறார்கள் முன்னோர்கள்.
பிரண்டையில் என்னவெல்லாம் இருக்கு என்பதை தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டிலும் வாரம் ஒரு முறை பிரண்டை சமையல் இருக்கும்.
அழகும் ஆரோக்யமும் வஞ்சமில்லாமல் தரும் மஞ்சள்
பிரண்டை அறிவோம்
இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டைதான் நாம் அதிகம் காண்கிறோம். இதைத் தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.
பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக் கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும் அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.
பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண் டையின் வேரும் தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது
வாயுக்களை விடுவிக்கும்.
வாயுக்கள் அதிகமாகும் போது நமது உடலில் இருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இவை உடலில் வலிகளை உண்டாக்கும். இந்த நீர் தான் வாயு நீர் என்றழைக்கப்படுகிறது. இவை முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாக மாறி பசைபோல் கழுத்துப் பகுதி வழியாக இறங்கி வழி யெங்கும் இறுகி முறுக்கும்.
இதனால் தீவிர கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் உண்டாகும். பிரண்டையைத் துவை யலாக்கி சாப்பிடுவதன் மூலம் இந்த வாயுநீர் வெளியேறும். மேலும் வாயு நீர் சேராமல் தடுக்கும். வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் வலுவான உடலை பெறுவார்கள்.
எப்படி செய்வது பிரண்டைத் துவையல்
முற்றல் இல்லாத இளம் பிரண்டையை வாங்கி தோல் நீக்கி நார் எடுத்தபிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இவை கைகளில் நேரடியாக படும்போது நமைச்சல் மற்றும் அரிப்புகளை உண்டாக்கும் என்பதால் கைகளில் எண்ணெய் தடவிகொண்டு நறுக்குவது நல்லது.
நறுக்கிய பிரண்டை துண்டுகள்-1 கப், உ.பருப்பு- கால் கப், காரத்துகேற்ப வரமிளகாய், புளி- கோலி அளவு, தேங்காய்- சிறுதுண்டு ,உப்பு- தேவைக்குசேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் இந்தப் பிரண்டை துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்துக் கும் தொட்டு கொள்ளலாம். உதிரான சூடாக இருக்கும் உதிரான சாதத்தில் இலேசாக நல்லெண்ணெய் வைத்து கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இப்படி கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் சிறுவயது முதல் உடலில் வாயுநீர் தங்காமல் இருக்கும்.
எலும்பை வலுப்படுத்தும்
கால்சியம் மாத்திரைகள் எலும்புகளின் உறுபத்திக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் பிரண்டயை விடாமல் சாப்பிட்டாமல் எலும்புகள் வலுப்படுவதோடு எலும்புகள் விரைவில் உடை யவோ, விலகவோ செய்யாது.
மூட்டுகளில் வீக்கம், வலி, சுளுக்கு போன்ற உபாதைகள் உண்டாகும் போது பிரண்டையை பற்றாக்கி போட் டால் வலி நாளடைவில் பறந்துவிடும். பழங்கால சிகிச்சை முறையில் இதைத்தான் நமது முன்னோர்கள் பயன் படுத்தி எலும்பு குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டை எலும்பு உயிரணு பெருக்கத்தை அதிகரிக்க செய்கிறது.
மூட்டுகளின் இயக்கம் சீராகவும் தீவிரமான கீல்வாத நோயால் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கும் வலி யின் தீவிரம் மற்றும் அழற்சியைக் குறைக்க பிரண்டை உதவுகிறது.
எலும்பு பலவீனமானவர்களின் எலும்புகளை பலப்படுத்தவும் எலும்பு மூட்டுகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது பிரண்டை. எலும்பு முறிவு சிகிச்சை எடுத்துகொண்டிருப்பவர்கள் மாத்திரைகளோடு பிரண்டைத்துவையல், பிரண்டை தோசை, பிரண்டை குழம்பு இவற்றோடு பிரண்டைக் கட்டையும் பயன்படுத்தலாம்.
வாயுத் தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்
எப்படி போடுவது
பிரண்டையுடன் கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து இரும்பு வாணலியில் விழுதை சேர்த்து வதக்கி வலி, சுளுக்கு, முறிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் வலியின் தீவிரம் நிச்சயம் குறையும். உடைந்த எலும்புகள் சீக்கிரம் இணையும். இதை அடுத்த பரிசோதனையில் கண்கூடாக காணலாம்.
மாதவிடாயிலும் பிரண்டை
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஒழுங்கற்ற மாத விடாய், மாதவிடாய்க் காலங்களில் அதிக உதிரப்போக்கு என்று அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இந்தப் பிரச்சனை வராமல் பாதுகாத்துகொள்ளலாம்.
எப்படி சாப்பிடலாம்
பிரண்டையை நறுக்கி சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து குடித்துவந்தால் சீரற்ற மாதவிடாய் சீராகும். மாதவிடாய்க் காலங்களில் முதுகுவலி இடுப்புவலி என்று அவதிப்படும் பெண்கள் பிரண்டையை மாத விடாய் வருவதற்கு ஒருவாரம் முன்பு எடுத்துகொண்டால் வலியிலிருந்து தப்பிக்கலாம். இவைத் தவிர பிரண் டைத் துவையலும் சாப்பிடலாம்.
மூல நோய் ஒழியும்
வயிற்றில் செரிமானசக்தி குறைவாகும் போதும் குழந்தைகள் மந்தமாக இருக்கும் போதும் பிரண்டைத் துவை யலைக் கொடுக்கலாம். இது செரிமானத்தைத்தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும். மூலநோய், ஆசனவாயில் அரிப்பு, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்து பிரண்டையை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் மூலநோய் குணமாகும் என்கிறார்கள் அனுபவமிக்க பெரியோர்கள்.
எப்படி சாப்பிடுவது
பிரண்டையைச் சுத்தம் செய்து நறுக்கி நெய்யில் வதக்கி இலேசாக உப்பு சேர்த்து காலையும் மாலையும் உட் கொண்டு வந்தால் மூலம் கட்டுப்படும்.
காணாமல் போகும் நோய்கள்
பெரும்பாலானோருக்கு இன்று காணப்படும் முக்கியமான நோய்களான இரத்த அழுத்தம், இதய நோய், நீரி ழிவு கட்டுப்பட பிரண்டை உதவுகிறது.
இரத்தக்குழாய்களில் தேங்கி நிற்கும் கெட்ட கொழுப்புகள் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இதயத்துக்கு இரத்தம் செல்வதைக் குறைக்கிறது. இந்த கொழுப்புகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது பிரண்டை.
குடல் புண், இரைப்பை அழற்சி, வயிற்றுப்பொருமல், சிறுகுடல், பெருங்குடல், புண் போன்றவற்றை நீக்கவும் துணைபுரிகிறது. பல் சொத்தையும் பல் ஈறுகளும் பல் கூச்சமும், பல் வலியும் என மொத்தமாய் காணாமல் போக பிரண்டை உதவுகிறது. குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற பிரண்டை போதும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பிரண்டைத்துவையல் போல் பிரண்டை இலை துவையலும் இதற்கு உதவுகிறது.
பிரண்டைத் துவையலைஎப்படி செய்வது
பிரண்டை இலை- ஒரு கப், இஞ்சி,பூண்டு விழுது- 1டீஸ்பூன், மிளகு -10 (காரத்துக்கேற்ப). வரமிளகாய் -2, கறிவேப்பிலை, கொத்துமல்லி- தலா ஒரு கைப்பிடி, உப்பு நல்லெண்ணெய்- தேவைக்கு.
வாணலியில் எண்ணெய் விட்டு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்துமல்லி வதக்கி அனைத்து பொருள் களையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொண்டு தேவையெனில் கடுகு சேர்த்து தாளித்து இறக்க லாம். இவைதவிர பிரண்டையை வருடம் முழுவதும் பயன்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்.
பிரண்டையை எல்லா காலங்களிலும் பயன்படுத்த பிரண்டை வற்றல் ஏற்றது. இளம்பிரண்டையை துண்டுக ளாக்கிய நன்றாக புளித்த மோரில் கைப்பிடியளவு உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து மீண்டும் ஊறவைத்த மோர் பானையில் கலக்கி அடுத்த நாள் காயவைத்து உலர்த்தி மோர் தீரும் வரை ஊறவைத்து நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் பிரண்டை வற்றல் தயார்.
பிரண்டை உப்பு
உடலுக்கு பல வகையில் நன்மை தரும் பிரண்டை உப்பை எளிதாக தயாரிக்கலாம். பிரண்டையை உலர்த்தி நன் றாக காய்ந்தது மண்சட்டியில் வைத்து தீயிட்டு சாம்பலாக்கவும். கிடைக்கும் சாம்பலை அளந்து ஒரு கிலோ சாம்பலுக்கு 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்து மண்சட்டி அல்லது பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 10 நாள் வரை வெயிலில் வைக்கவேண்டும்.
நீர் வற்றி வற்றி அந்த சாம்பல் உப்பாக படிந்து பாத்திரத்தின் அடியில் படர்ந்திருக்கும். இதைத்தான் பிரண்டை உப்பு என்று சொல்கிறோம். இந்தபிரண்டை உப்பு உடலில் தேவையற்று இருக்கும் ஊளைச்சதையைக் குறைத்து வெளியேற்றும். காலை மாலை பாலில் கலந்துசாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தெரியும்.
ஆண்கள் பாலில்பிரண்டை உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை பெருக்கும். பிரண்டை நினைவுத்திறனை யும் உடலுக்கு புத்துணர்ச்சியும் உடல் சுறுசுறுப்பையும் வளமாக்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.
பிரண்டையின் பலன்கள் இவ்வளவு இருந்தாலும் பிரண்டை வாங்கி சுத்தம்செய்து என்று சலித்துகொள்பவர்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் பிரண்டை பொடியை வாங்கி பயன்படுத்தலாம். மேலும் பிரண்டை உப் பும் கிடைக்கிறது. தரமான கடைகளில் வாங்கி பயன்படுத்துங்கள்.
ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் பிரண்டையில் பிரண்டைத்துவையல்,பிரண்டை இலைத்துவையல் வீட்டில் செய்து சாப்பிட்டால் பலனும் கண்கூடாக காணலாம். இனி பிரண்டையை வாங்குவதோடு வீட்டிலும் வைத்திருங்கள். ஆரோக்கியமான வீட்டுக்கு அடித்தளம் பிரண்டை போன்ற மூலிகைதான்.
Wednesday, February 12, 2020
Corono virus. Full details
*சொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா? # இந்திய சைன போர் ஏற்பட்டால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என கூவியவர்களும் இதற்கு உடந்தையோ*
கொரோனா வைரஸ்:
உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது
தன்வினை தன்னைச்சுட்டது
சீனாவில் துவங்கி உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகமே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.
உலகில் பல நாடுகள் இரும்புத்திரை நாடுகளாக இருந்தன. தொழில்நுட்ப முன்னேற்றம் பல நாடுகளின் இரும்புத்திரைகளை உடைத்து விட்டன. இதுவரை உடையாமல் இருக்கும் முக்கிய 2 இரும்புத்திரை நாடுகள் சீனாவும், வடகொரியாவும்.
வடகொரியா சிறிய நிலப்பகுதி. மக்கள் தொகையும் குறைவு. எனவே நிர்வகிப்பது சுலபம். ஆனால் சீனா பிரம்மாண்ட நிலப்பரப்பை கொண்டது. மக்கள் தொகையும் மிகவும் அதிகம். இருப்பினும் சீனாவில் இருந்து அரசு அனுமதியின்றி எந்த தகவலும் வெளியே வராது. இணைதள தேடுபொறி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்துமே சீனாவுக்கென தனியாக உள்ளன.
அப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
தன் நாட்டு செய்தி பரவுவதை தடுக்க முடியும் சீனாவால் .... ஆனால் இந்த வைரசை தடுக்க முடியாமல் தவிக்கிறது சீனா. இதில் பல விஷயங்களை சீனா வெளியிடாமல், வெளிவர விடாமல் தடுத்து வருகிறது. பலர் உயிரிழந்த பின், 2 நாட்களுக்கு முன் தான் வேறு வழியின்றி வைரசின் நுண்ணோக்கி வடிவத்தை சீனா வெளியிட்டது. அது வெளிவந்த பின் தான் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கியுள்ளன.
இந்த வூகான் மாகாணத்தில் உயிரி ஆயுத (பயோ வெப்பன்) ஆய்வு மையத்தை சீனா நடத்தி வருகிறது. குண்டு சத்தமின்றி வெறும் உயிரி தாக்குதல் மூலம் பிற நாட்டை அழிப்பதற்கான ஆராய்ச்சி அது. சுருக்கமாக சொல்வதென்றால் 'தசாவதாரம்' படத்தில் குப்பியை சாப்பிட்டவுடன் வளர்ப்பு குரங்கு கரையுமே அது தான்.
இது முக்கியமாக இந்திய ராணுவத்தை குறி வைத்து தான் தொடங்க பட்டதாக என் எண்ணம் ,, டோக்கலாம் பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா...
ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு. வூகான் ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், 'அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல, உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்' என சீனா பதிலளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஏற்கனவே சார்ஸ், எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால் தனக்கு இருக்கும் மிருக பலத்தால் அனைத்தையும் சீனா முனை மழுங்கச் செய்தது.
ஆனால் இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் விஷயத்தை கசிய விடுகிறது. யாராவது இதற்கு தடுப்பு மருந்து கண்டு புடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா அதனால் தான் விஷத்தை கசிய விடுகிறது
#சீனபுத்தாண்டு
மேலும் வைரஸ் உருவாகியிருக்கும் காலமும் அதற்கு சிக்கலாகி விட்டது.
சீன புத்தாண்டு ஜன.25ல் கொண்டாடப்படும். இதற்காக உலகமெங்கும் உள்ள சீனர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். இந்த சூழலில்தான் கொரோனா பரவியது. வந்தவர்களை வெளியேற விட்டால் உலகம் முழுதும் பரவி விடும்.
சீனாவில் இருந்து வரும் விமானங்களை அனைத்து நாடுகளும் நிறுத்தி விட்டன.. எந்த சீனர்களும் அந்த நாட்டுக்குள் போனால் திரும்பி எந்த நாடும் ஏற்காது,, இதனால் போக முடியாது வரவும் முடியாது என்ற நிலை சீனர்களுக்கு உருவாகி விட்டது,, ஒவ்வொரு நாட்டிலும் சீனர்களை கண்டு விலகி ஓடும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இதனால் சீனாவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது
#வைரஸ்உருவானதற்கு
முதல் கட்ட நடவடிக்கையாக, 'வைரஸ் உருவானதற்கு வவ்வால் காரணம்' என கூறி வூகான் சந்தையை முதலில் மூடியது. இருப்பினும் வைரஸ் அசுர வேகத்தில் பரவவே வூகானுக்கு அவசரம் அவசரமாக 'சீல்' வைத்தது.நேற்றைய நிலவரப்படி 910 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 'ஆனால் பலி எண்ணிக்கை லட்ச கணக்கில் இருக்கும் என்கின்றன உலக நாடுகள்.
2 நாட்களுக்கு முன்பு கெரோனா வைரசின் நுண்ணோக்கி படம் வெளியானதும், ஆஸ்திரேலியாவில் உள்ள உயிர்க்கொல்லி வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையம் அதை போன்ற வைரசை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
#தொடர்ந்து குழப்பும் சீனா
கொரோனா தன் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்றால் உலகத்தில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ,
‛கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தோம் . அதில் வவ்வால்களின் மரபணுக்கள் காணப்படுகின்றன. சார்ஸ் வைரசின் மரபணுவும் உள்ளது.
வூகான் மாகாணத்தில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்கப்பட்ட வவ்வாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளது. என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட 9 நோயாளிகளும் அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை. வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது' என குறிப்பிட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#தெருக்களில் உடல்
பொழுது விடிந்தால் தெருக்களில் பிணங்கள் கிடப்பது சகஜமாகி விட்டது,, யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்து அள்ளி கொண்டு போகும் நிலை நடந்து வருகிறது
இதனால் வூகான் நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அங்கிருக்கும் அனைவரும் உடல் கவசம் அணிந்தே சென்று வருகின்றனர். இருநாட்களுக்கு முன் அங்குள்ள கடை முன் 60 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த ஒரு நபரின் சடலம் கிடந்தது. இவர் கொரோனாவிற்கு பலியானவர்தான் என கூறப்படுகிறது. முகமூடி அணிந்தவரும் இந்த நோய்க்கு தப்பவில்லை என்பது தான் கொடுமை
இதனால் வூகான் நகருக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. 2 நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை
#அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரி பாதுகாப்பு மையம் உள்ளது. இதன் ஆலோசகர் டிம் ட்ரெவன், 2017 ம் ஆண்டே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டார். 'வூகானின் ஆய்வு மையத்தில் உலகத்தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்' என்றார்.
#இஸ்ரேல் ; இதை உறுதி செய்யும் விதத்தில் இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம் அளித்த பேட்டியில், 'வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பது எனது உறுதியான கருத்து' என்றார்.
'சார்ஸ், எபோலா' என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே உலக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எச்சரிக்கையும் செய்துள்ளனர்
வூகானில் துவங்கிய கொரோனா பயணம் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலும் தொடர்கிறது. இதனால் ஒட்டு மொத்த சீனாவே உறைந்து நிற்கிறது.
அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது.
சார்ஸ், எபோலா' என உயிர்க்கொல்லி வைரஸ்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. 'அதே போன்று தான் கொரோனாவும்' என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தட்பவெப்ப நிலை. இங்கு நிலவும் கடும் வெப்பம் எந்த வைரசையும் சுட்டெரித்து விட கூடியது.
கொரோனா வைரசால் சீனாவில் இருந்து சென்ற ஜப்பானியர்கள் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் 200 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் அறிகுறி எதுவுமின்றி கொரோனா பாதிக்கும் என்ற தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன தம்பதி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். அவர்களது 10 வயது மகன் எந்த பாதிப்பும் இன்றி இருந்தார். இருப்பினும் அவருக்கு சோதனை செய்யுமாறு பெற்றோர் வலியுறுத்தினர்.சோதனையில் அந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது. ஆனால் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த தகவல் உலகம் முழுவதையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மனித குல வரலாற்றில் சக மனிதனை அழிக்கும் யுக்தியை மனிதன் வளர்த்து கொண்டான் விளைவு மனித குலத்துக்குத்தான் அழிவு
இனி வடகொரியா என்ன வச்சிருக்கான் என்று தெரியவில்லை அதனால் உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை ...