Monday, August 17, 2020

Kodi swamigal. 17.8.20

தினம் ஒர் சித்தர் வரலாறு

75.பெயர்: புரவிபாளையம் கோடி சுவாமி

வரலாறு சுருக்கம்
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வம் என்று இருந்தாலும் இஷ்ட தெய்வமாக ஒரு தெய்வத்தை வணங்கி வருவர். அதாவது, குலதெய்வக் கோயிலுக்கு வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் போய் வருவார்கள். ஆனால், இஷ்ட தெய்வத்தை அடிக்கடி சென்று வணங்கி வருவர். 'குலதெய்வத்தை விட்டுவிட்டு 
இஷ்ட தெய்வத்தை வணங்குகின்றானே... குலதெய்வம் இவனைத் தண்டித்து விடாதா?' என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வியே தவறு.
காக்கின்ற குணத்தைக் கொண்டவர்கள்தான் கடவுளர்கள். என்ன ஒன்று... தர்ம- நியாயத்துக்குக் கட்டுப்பட்டு நேர்மையான முறையில் நாம் வாழ்ந்து வருகிறோமா என்பதை மட்டும் கடவுள் கண்காணித்தபடியே இருப்பார். அதர்மம் செய்தால் சாட்டையைக் கையில் எடுப்பார். நேர்மையுடன் வாழ்ந்து வருபவர்களை எந்தக் கடவுளும் கைவிட மாட்டார். காப்பாற்றி கரை சேர்ப்பார். அது குலதெய்வமாகட்டும்; இஷ்ட தெய்வமாகட்டும்.
மண்ணில் உதித்து- உதிர்ந்த மகானையும் தங்களது இஷ்ட தெய்வமாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கும் அவரை ஆராதித்து வருகின்றன. குலதெய்வக் கோயிலுக்குப் போகிறார்களோ இல்லையோ... ஆனால், இவரது திருச்சந்நிதிக்கு வந்து இவரை வணங்கிச் செல்கின்றனர். அந்த மகானின் சமாதியில் விதம் விதமான வண்ண மலர்களை வைத்து வழிபடுகிறார்கள்; ஊதுவத்தி ஏற்றி, தூபம் காட்டுகிறார்கள்; சமாதியை வலம் வருகிறார்கள். சமாதியின் மேல் முகம் புதைத்து, தங்களின் சுக துக்கங்களை - மீளாத் துயிலில் உறையும் அந்த மகானுடன் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அந்த மகான் - 'ஸ்ரீலஸ்ரீ பொன்முடி கோடி மஹா சுவாமிகள்' என்று அழைக்கப்படும் புனிதர். பொள்ளாச்சியை அடுத்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கும் புரவிபாளையம் எனும் கிராமத்தில் கடந்த 11.10.94 அன்று மகா சமாதி அடைந்தவர் இவர். பக்தர்கள் எளிதான வார்த்தைகளில் இவரை அழைக்கும் பெயர் - கோடி சாமீ (கோடி சுவாமிகள்).
கோடி சுவாமிகள்.... இந்தப் பெயர் எப்படி வந்தது? ''கோடி கோடியான இன்பங்களையும் செல்வங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்குவதால் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்'' என்கிறார் அவருடைய பக்தர் ஒருவர். அதற்கேற்றாற்போல் தன்னிடம் வந்து ஆசி வாங்கக் காத்திருக்கும் அன்பர்களிடம், ''கோடி வரும்... தேடி வரும்...'' என்றெல்லாம் சுவாமிகள் சொல்வாராம்.
கோடி சுவாமிகளின் இயற்பெயர் என்ன? எப்போது பிறந்தார்? எங்கு பிறந்தார்? இந்த மகானை ஈன்றெடுத்த புண்ணியத் தம்பதி யார்?
- இப்படிப் பல கேள்விகளை சுவாமிகள் இருக்கும்போதே பலரும் அவரிடம் கேட்டார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறு புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்தார் சுவாமிகள். ஆகவே, மேலே சொன்ன எந்தக் கேள்விக்கும் இதுவரை சரியான பதில் இல்லை. 'ஷீர்டி பாபாவின் மறு அம்சம் இவர்' என்று கோடி சுவாமிகளைப் பற்றிச் சிலர் சொல்கிறார்கள். 'வடக்கே இருந்து வந்த கோடி சுவாமிகள், உலகளாவிய விஷயங்களை அறிந்தவர்' என்பர் சிலர். இவர், கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இந்துஸ்தானியில் சில பாடல்களைப் பாடுவாராம். சில நேரங்களில் 'ராம ராம' என்று ஜபிப்பாராம். வள்ளலார், விவேகானந்தர் பற்றி சுவாமிகள் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாராம்! அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைப் பற்றி அடிக்கடி பேசுவாராம். கல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.
'தாத்தா சுவாமிகள்' என்றும் பக்தர்கள், கோடி சுவாமிகளை அழைப்பர். காரணம் - 
சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் 'தாத்தா... தாத்தா' என்றே அழைப்பாராம். இதற்கு வாலிப வயசு ஆசாமிகளும் விதிவிலக்கு இல்லை. ''வா தாத்தா... காலேஜ் நல்லா படிச்சிட்டிருக்கியா?'' என்று மாணவர்களிடம் கரிசனமாக விசாரிப்பாராம்.
சுவாமிகள் எப்படி இருப்பார்? செக்கச் செவேல் நிறம்; ஒளி வீசும் கண்கள்; சுருக்கங்கள் விழுந்த தேஜஸான முகம்; அதில் தவழும் அமைதி- சாந்தம்; பஞ்சு போன்ற வெண்தாடி; தன்னைத் தேடி வருபவர்களை நல்வழிப்படுத்துகிற ஞானப் பார்வை; குளிருக்கும் சரி; வெயில் காலத்திலும் சரி... ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கோட்டுகளை அணிந்தபடியே இருப்பாராம் சுவாமிகள். இதற்கென்று சுவாமிகளுக்கு கோட்டு மற்றும் தொப்பிகளை அடிக்கடி அவரது பக்தர்கள் வாங்கி வந்து தருவது உண்டாம். சில நேரங்களில் தலையை கிரீடம் அலங்கரிக்கும்.
புரவிபாளையத்துக்குக் கோடி சுவாமிகள் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம்.
முதன் முதலில் சுவாமிகள், தனுஷ்கோடியில்தான் பக்தர் ஒருவரால் அறியப்பட்டார். புனித பூமியாம் தனுஷ்கோடியைக் கடல் கொள்வதற்கு முன் நடந்த சம்பவம் இது. தனுஷ்கோடி ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள அந்தோணியார் கோயில் அருகே ஒரு மேடை மீது ஒற்றைக்காலில் நின்றபடி எந்நேரமும் தவம் செய்து கொண்டிருப்பாராம் சுவாமிகள். அந்த வழியே செல்கின்ற மீனவர்களும் மற்றவர்களும் இவரிடம் ஏதும் பேச மாட்டார்களாம். 'இவரது கடும் தவத்துக்கு நாம் இடைஞ்சல் செய்யக் கூடாது' எனும் எண்ணத்தில் நகர்ந்து விடுவார்களாம்.
அப்போது, பக்தர் ஒருவரது வேண்டுகோளுக்கும் விருப்பத்துக்கும் இணங்க, அவரது இல்லத்தில் சென்று சில நாட்கள் தங்கினார் கோடி சுவாமிகள். இது போல் பக்தர்கள் எவரேனும் விரும்பி அழைத்தால் அவர்களது இல்லத்துக்குச் சென்று சில நாட்கள் தங்குவது சுவாமிகளது வழக்கம். இப்படித்தான் தனுஷ்கோடிவாசத்துக்குப் பின் திருச்சி, பழநி, சென்னை தண்டையார்பேட்டை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் 
உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் என்று பயணித்து கடைசியாக 1962-ஆம் ஆண்டு புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார் சுவாமிகள்.
காரில் வந்து இறங்கிய சுவாமிகள், தானாகவே விறுவிறுவென நடந்து, ஜமீன் வீட்டு மாடிப்படியில் ஏறி, தான் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானித்துக் கொண்டாராம். முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு இடத்துக்கு வந்த சுவாமிகள், இப்படி சகஜமாக நடந்து கொண்டதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இதற்கு விளக்கம் தரும் வகையில் பின்னாளில் சுவாமிகளே சொன்ன பதில் இது:
''சுமார் 200 வருடங்களுக்கு முன், புரவிபாளையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கேதான் தங்கினேன். எந்தக் குறைவும் இல்லாமல் சாப்பிட்டேன். ஜமீனில் உள்ளவர்கள் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இங்கு வந்து தங்க நேரிட்டது. புரவிபாளையம் ஜமீனில் இருந்து வந்த சிலர் என்னை கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் கிளம்பும்போது, 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்றேன். அதன்படி புரவிபாளையம் புறப்பட்டேன்.'' கோடி சுவாமிகள் 300 வருடம் இந்த உலகில் வசித்ததாகச் சொல்கின்றனர் சிலர்.
புரவிபாளையம் ஜமீன் இல்லத்து முதல் மாடிதான் சுவாமிகளது வாசம்! சமாதி ஆகும் வரை - தான் இங்கே வசித்து வந்த 32 வருடங்களிலும் (1962- 1994) ஒரு நாள் கூட படி இறங்கி கீழே வந்ததே இல்லையாம்! அதாவது முக்கியமான பக்தர்கள் சிலர், ஜமீன் பங்களாவுக்குள் வந்து சுவாமிகளை தரிசிப்பார்கள். அப்போது மாடியில் மேடை ஒன்று அமைத்து, அதில் இருந்தபடி அவர்களுக்கு தரிசனம் தருவார் சுவாமிகள். ''ஏன் சாமீ, நீங்க கீழே வர மாட்டேங்கறீங்க?'' என்று பக்தர்கள் கேட்டபோது, ''நான் கீழே வந்தா உன்னால என்னைப் பாக்க முடியாது'' என்பாராம். எந்தப் பொருளில் கோடி சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.
பக்தர்களில் ஏழை- பணக்காரர் எனும் பாகுபாடோ... ஜாதி-மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இன்றும் இவரது சமாதிக்கு முஸ்லிம், கிறிஸ்துவர் 
உட்பட மதங்களைக் கடந்து பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்ன பொருளைத் தர எண்ணுகிறாரோ.. அதை சம்பந்தப்பட்டவரை நோக்கி வீசி எறிவாராம். இப்படி அவர் எறியும் பொருட்களுள் தொப்பி, பூமாலை, பழங்கள், இனிப்புகள் போன்றவை அடங்கும்.
சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம்; ஆனால், பக்தர்கள் எப்போதேனும் பாட்டிலில் கொண்டு வந்து கொடுக்கும் பன்னீரைக் கடகடவெனக் குடித்து விடுவாராம். அதேபோல் சுவாமிகள், தன் கையால் உணவு சாப்பிட்டு எவரும் பார்த்தது கிடையாது. பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை அன்புடன் அவருக்கு ஊட்டி விடுவார்களாம். சுவாமிகள் விருப்பப்பட்டால் உணவுக்காக வாயைத் திறப்பார். விருப்பம் இல்லாவிட்டால், 'வேண்டாம் போ' என்பதாக சைகை காட்டி விடுவார். சைவம், அசைவம் - எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். உணவில் பாகுபாடு மனிதர்களுக்குத்தான்; மகான்களுக்கு அல்ல. ஓரிரு வாய் மட்டுமே உண்பார். அவ்வளவுதான்.
இந்த தருணத்தில், குறிப்பிட்ட சில பக்தர்களை அழைத்து, கையை நீட்டச் சொல்லி, தன் வாயில் இருக்கும் உணவையே பிரசாதமாகத் துப்புவாராம். இந்த பிரசாதம் கிடைப்பதை பெரும் பாக்கியமாக கருதினர் கோடி சுவாமிகளின் பக்தர்கள். இத்தகைய அனுக்கிரஹம் வாய்க்கப் பெற்றவர்கள் குறைவானவர்களே! 'சுவாமிகள் துப்புவதை நாம் உட்கொள்ளுவதாவது... சேச்சே' என்று அருவருப்பு அடைந்த சில பக்தர்கள், வாழ்க்கையில் தாங்கள் உயர வேண்டிய சில சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டு விட்டதாக அவர்களே பின்னாளில் வருத்தப்பட்டுக் கூறியது உண்டு. பக்தர்கள் அன்புடன் தரும் ஆரஞ்சு மிட்டாய்கள், சாக்லெட்டுகள் ஆகியவற்றை தன் வாயில் போட்டு சுவைப்பார் சுவாமிகள். அவர் அருகே காத்திருக்கும் பக்தர்கள், 'சுவாமிகள் நம்மிடம் ஆரஞ்சு மிட்டாயைத் துப்ப மாட்டாரா? சாக்லெட்டைத் துப்ப மாட்டாரா?' என்று காத்துக் கிடப்பார்களாம்.

கோடி சுவாமிகளின் நெருங்கிய பக்தர் ஒருவர் நம்மிடம் சொன்னார்: ''இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சுவாமிகள் வெளியில் சென்று நான் பார்த்ததே இல்லை. அதேபோல் எனக்குத் தெரிந்து சுவாமிகள் குளித்ததாகவும் தெரியவில்லை. ஆனால், சுவாமிகளிடம் இருந்து மயக்கும் வகையில் நறுமணம் ஒன்று வீசியபடியே இருக்கும்.''
இனி, கோடி சுவாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
புரவிபாளையம் ஜமீனில் இருந்தபோது நடந்தது இது! அடுப்பில் இருந்து இறக்கி வைத்த மிளகாய்க் குழம்பு பாத்திரத்தைக் கையில் எடுத்து, 'பசிக்கிறது' என்று சொல்லி, சுடச் சுட இருந்த குழம்பு மொத்தத்தையும் மடமடவென்று குடித்து விட்டு, வெறும் பாத்திரத்தைக் கீழே வைத்தாராம். இதேபோல், திருச்சியில் அன்பர் ஒருவரது வீட்டில் இருந்தபோது கொதிக்கக் கொதிக்க இருந்த கஞ்சியை அப்படியே எடுத்துக் குடித்தாராம்.
அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சுவாமிகளின் தீவிர பக்தை. புரவிபாளையம் வந்து சுவாமிகளை அடிக்கடி தரிசித்துச் செல்வார். ஒரு முறை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல வைத்தியங்கள் பார்த்தும் வலி தீர்ந்தபாடில்லை. ஆனாலும் அந்த வலியுடனேயே புரவிபாளையம் வந்து சுவாமிகளை தரிசித்த பெண்மணி, கண்களில் நீர் தளும்ப, தன் சோகத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார். 'உட்கார்' என்பதாக சைகை காட்டினார். அதன்படியே அமர்ந்தார் பெண்மணி.
அதே வேளையில், சுவாமிகளின் பக்தர் ஒருவர் அவருக்கு முன்னே பவ்யமாக வந்து அமர்ந்தார். பிறகு, 'அடியேன் கொண்டு வந்த உணவை தங்களுக்கு ஊட்டி விட வேண்டும்' என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். மெள்ள புன்னகைத்தபடி 
சம்மதித்தார் சுவாமிகள். உடனே அந்த பக்தர், கையில் இருந்த டப்பாவைத் திறந்தார். அதற்குள் இருந்தது- மாமிச உணவு. அருகில் உட்கார்ந்திருந்த அந்தணப் பெண்மணி சட்டென அருவருப்படைந்தவராக, முகம் சுளித்தார். சுவாமிகள் சிரித்தபடியே, பக்தர் ஊட்டி விட்ட மாமிசத் துண்டங்களைச் சாப்பிட்டார்.
திடுமென அந்தப் பெண்மணியின் வலது கையை நீட்டச் சொன்னார். தன் வாயில் இருந்த மாமிச உணவை அவரது கையில் துப்பினார். ''சாப்பிடு'' என்றார். அருவருப்புடன் கண்களை மூடிய அந்தப் பெண்மணி, மறுகணம் கண்களைத் திறந்து வலது கையைப் பார்த்தார். அவரது கையில் இருந்த மாமிசத் துண்டு விநாடி வேளையில் சாக்லெட்டாக மாறி இருந்தது. சுவாமிகளின் அற்புதத் திருவருள் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் பெண்மணி. முகம் மலர அதை எடுத்துச் சாப்பிட்டார். அவ்வளவுதான்! சில நாட்களிலேயே அவரது வயிற்று வலி போயே போனது.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாள் ஒரு பெண்மணி. அவளுக்கு ஒரு மகன். ஆனால், சோகம் பாருங்கள்... பிறவியில் இருந்தே அவனுக்குப் பேசும் திறன் இல்லை. இதை நினைத்து நினைத்தே தவித்துப் போவாள் அந்தப் பெண்மணி. 'எம் மகனுக்கு எப்ப பேச்சு வரும் சாமீ?' என்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கேட்டபடியே இருப்பாள்.
புரவிபாளையம் வந்து கோடி சுவாமிகளைத் தரிசித்துச் செல்லும் வெளியூர் அன்பர் ஒருவர், ஒரு நாள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் யதேச்சையாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். எல்லோரிடமும் கேட்கும் அதே கேள்வியை இவரிடம் கேட்டாள் பெண்மணி. 'ஏம்மா.. கையிலேயே வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறியேம்மா. புரவிபாளையம் சாமி கிட்ட போ... எங்கெங்கிருந்தோ எல்லாம் பக்தர்கள் தேடி அவர்கிட்ட வர்றாங்க. நீ அவரைப் பத்தி தெரியாம இருக்கியே' என்று சொல்லி விட்டுப் போனார்.
ஒரு நாள் தன் மகனை அழைத்துக் கொண்டு, புரவிபாளையம் புறப்பட்டாள். இவள் அங்கே போனபோது அன்பர் ஒருவர், சுவாமிகளுக்குத் தன் கையால் உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, பெண்மணியும் அவளது மகனும் 
சுவாமிகளை விழுந்து நமஸ்கரித்தனர். 'என் மகனுக்குப் பேசும் பாக்கியம் இல்லையே...' என்று பெருங்குரல் எடுத்து சுவாமிகளிடம் கதறினாள். தனக்கு உணவு ஊட்டிய அன்பரிடம், ''அவனுக்கு ஒரு வாய் கொடுப்பா'' என்றார் சுவாமிகள். உடனே அந்த அன்பரும் சிறுவனின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டினார்.
பின்னர், சிறுவனைப் பார்த்து மெள்ளச் சிரித்தார் சுவாமிகள். சிறுவனும் புன்னகைத்தான். பிறகு, அவனை ஆசிர்வதித்தவர், ''போய் வா'' என்பதாகப் பெட்டிக்கடைப் பெண்மணிக்கு உத்தரவு கொடுத்தார் சுவாமிகள். மகனை அழைத்துக் கொண்டு பெண்மணியும் மற்ற சிலரும் சுவாமிகளது திருவருளைப் பேசியபடியே பொள்ளாச்சி பேருந்து நிலையம் வந்தனர். உடன் வந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து உடுமலைப்பேட்டைக்குச் செல்ல வேண்டும். எனவே பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது இவர்கள் நின்றிருந்த பகுதியை நோக்கி பேருந்து ஒன்று வேகமாக வந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் இதை எவரும் கவனிக்கவில்லை. பேருந்து இவர்களை மோதித் தள்ளி விடுவது போன்ற வேகத்தில் நெருங்கும்போது, ''அம்மா... பஸ்சு. ஓரமா போங்க... அம்மா... பஸ்சு. ஓரமா போங்க'' என்கிற குரல், அலறலாக ஒலித்தது. ஆனால், பெட்டிக்கடைப் பெண்மணி மட்டும் அப்படியே திகைத்து நின்றாள். இங்கே எச்சரிக்கை விடுத்தது யார்? யாரோ சிறுவனது குரல் போல் அல்லவா இருக்கிறது? என்று குழப்பத்தில் நின்றவளிடம், ''அம்மா... எனக்குப் பேச்சு வந்திடுச்சும்மா. என்னால பேச முடியுதும்மா...'' என்றான், அவருடைய மகன். அவனை அப்படியே வாரியணைத்து, சந்தோஷத்தில் கதறியவள், புரவிபாளையம் திசை நோக்கிக் கரம் குவித்து வணங்கினாள்.
சுவாமிகளைத் தரிசிக்க புரவிபாளையம் வந்த அன்பர் ஒருவர், சுவாமிகளுக்குக் கால்களைப் பிடித்து நீவி விட்டார். பிறகு, சுவாமிகளுக்கு மாலை அணிவித்து, அவரது திருப்பாதங்களைத் தொட்டு வணங்கும்போது, 'பீப் பீப்' எனும் ஒலி எழும்பியது. தன் கையில் கட்டியுள்ள விலை உயர்ந்த- புத்தம் புதிய கடிகாரத்தில் இருந்துதான் இந்த ஒலி வருகிறது என்பதை அறிந்த அன்பர், தன் முழுக்கைச் சட்டையை எவரும் அறியா வண்ணம் கீழிழுத்து விட்டு, கடிகாரத்தை மறைத்துக் கொண்டார். அதாவது, 'இந்த கடிகாரத்தை பார்த்து விட்டு சுவாமிகள் கேட்டு விடுவாரோ' என்று பயம் அன்பருக்கு! காரணம்... இந்த கடிகாரத்தை நண்பர் ஒருவர் பரிசாக வழங்கியிருந்தார்.

அன்பரது எண்ண ஓட்டத்தை அறியாமலா இருப்பார் சுவாமிகள்?! அரை மணி நேரம் கழித்து சுவாமிகளிடம் ஆசி பெற்ற அன்பர் விடை கொடுக்கும்படி கேட்டார். மலர்ந்த முகத்துடன் அவருக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், தன் வலக் கையை அன்பரின் கைக்கடிகாரத்தின் மேல் வைத்து, 'இதைக் கழற்றி வெச்சுட்டுப் போ' என்றார் சிம்பிளாக. நண்பர் வழங்கிய பரிசுப் பொருளை இழக்க அன்பருக்கு மனம் வரவில்லை. ஆகவே, சுவாமிகள் சொன்னது காதில் விழாதது போல், மெள்ள அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நேராக கோவைக்கு வந்தவர், பேருந்து நிலையத்தில் நேரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று கடிகாரத்தைப் பார்த்தார். அந்த கடிகாரம் ஓடவில்லை. நின்று போயிருந்தது. அதாவது, 'கழற்றி வெச்சுட்டுப் போ' என்று சுவாமிகள் சொன்னபோது என்ன நேரமோ, அந்த நேரத்திலேயே நின்றது.
அதிர்ந்து போனார் அன்பர். 'புதிதாக வந்த கடிகாரம் அதற்குள் எப்படி ரிப்பேராகும்? ஒரு வேளை... சுவாமிகளின் திருவிளையாடலாக இருக்குமோ?' என்ற குழம்பித் தவித்தவர், பிறகு அருகில் இருந்த கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்ப்பதற்காகக் கொடுத்தார். பிறகு ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டதும் மீண்டும் கையில் கட்டிக் கொண்டார் அன்பர். ஆனாலும் என்ன... மீண்டும் கடிகாரம் மக்கர் பண்ணியது. 'கழற்றி வெச்சுட்டுப் போ' என்று சுவாமிகள் சொன்ன அதே நேரத்தில் நின்றது என்பதுதான் ஆச்சரியம். இதை அடுத்து, சென்னையின் பிரபல கடிகாரக் கடைகளில் கொடுத்தும் பலன் இல்லை. மீண்டும் மீண்டும் அதே நேரத்தில் நின்றது.
ஒரு நாள், புரவிபாளையம் வந்து, சுவாமிகளை தரிசித்தவர், கடிகாரத்தை கழற்றி சுவாமிகளிடமே கொடுத்து விட்டு வணங்கினார். 'நான் எப்போதோ கேட்ட பொருளை இவ்வளவு தாமதமாகத் தருகிறாயா?' என்பது போல் அன்பரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே பெற்றுக் கொண்டார் சுவாமிகள். அடுத்த விநாடியே அருகே அமர்ந்திருந்த வேறொரு அன்பரை அழைத்து, அவரிடம் இந்த கடிகாரத்தைக் கொடுத்தார். அந்த ஆசாமி, 'சுவாமிகளது அருளால் இனி நமக்கு நல்ல காலம்தான்' என்று சந்தோஷமாகக் கிளம்பினார்.
இதையடுத்து சுமார் ஓராண்டு கழித்து, கடிகாரத்தைக் கொடுத்தவரும் பெற்றுக் கொண்டவரும், ஒரு நாள் யதேச்சையாக புரவிபாளையத்தில் சந்தித்துக் கொண்டனர். கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ''சார்... சாமீ கையால உங்களோட கடிகாரத்தை நான் வாங்கின நேரம்... ஊருக்குப் போய் கடிகாரக் கடை வெச்சேன். தொழில் அமோகமா போகுது. நல்லா இருக்கேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இதைக் கேட்டதும் கடிகாரம் கொடுத்த அன்பர் சிலிர்த்துப் போய் விட்டார். 'தன்னிடம் இருந்த கடிகாரம் இவரது கைக்குப் போனதும், இந்த நபர் கடை துவங்கி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் எவரால் மாற்ற முடியும்?' என்று தெளிந்து, சுவாமிகளை வணங்கி விட்டுச் சென்றார்.
கோடி சுவாமிகளின் அற்புதங்களை இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவரது அருளால் முன்னுக்கு வந்தவர்கள், பல தொழில்களில் புகழ் பெற்று தேசங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வருகின்றனர்.
சுவாமிகளது மகா சமாதியை, புரவிபாளையம் ஜமீனே நிர்வகித்து வருகிறது.
11.10.94 அன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் மகா சமாதி ஆனார் கோடி சுவாமிகள். இதை அறிந்த ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்ணீருடன் ஓடோடி வந்தனர். ஜமீன் பங்களாவை ஒட்டியே சுவாமிகளுக்கு சமாதி அமைக்கப்பட்டது. நாற்காலியில் அமர்ந்த நிலையில் சுவாமிகளது உடலை கீழிறக்கி, சுற்றிலும் விபூதி, வில்வம், துளசி ஆகியவற்றை நிரப்பினர். மேலே சிமெண்ட் ஸ்லாப் போட்டு சமாதியை மூடினர். அத்துடன், சுவாமிகளது சிரசுப் பகுதிக்கு நேராக சிறு துவாரம் ஒன்று அமைத்து, அதன் மேல் சிறிய சிவலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோடி சுவாமிகளின் சக்தி முழுவதும், இந்த சிவலிங்கத்தில் இருப்பதாக நம்புகின்றனர் இவருடைய பக்தர்கள். எனவே, சமாதியை வலம் வந்து, சிவலிங்கத்தை வணங்கிச் செல்கின்றனர். இங்கு பூசாரி இல்லை; பக்தர்களே அவர்கள் விரும்பியபடி வழிபட்டுச் செல்லலாம்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோடி சுவாமிகளின் மகா சமாதியைத் தரிசிக்கப் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி, ஆடி அமாவாசை, சுவாமிகளின் குருபூஜை (அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி) ஆகிய தினங்களில் திரளான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்தை இன்னார்தான் நடத்துகிறார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சுவாமிகளின் சமாதி முன் எல்லோரும் சமம். எனவே, பக்தர்கள் அனைவரும் தங்களது 
பங்களிப்பை செலுத்துகின்றனர். அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு வந்து குவிப்பர். காய்கறி நறுக்குவது, அரிசி களைவது, சமையல் செய்வது என்று அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.
கோடி சுவாமிகளின் வெளியூர் பக்தர்கள் சொல்வது இதைத்தான்: ''எங்களுக்கு எந்த ஒரு கஷ்டம்னாலும் இஷ்ட தெய்வமான அவரை, இருந்த இடத்தில் இருந்தபடியே மனசார நினைச்சுப்போம். வீட்டு பூஜையறையில் இருக்கிற அவரோட படத்துக்கு ஒரு பூ வெச்சுப் பிரார்த்தனை செய்வோம். ஆரஞ்சு மிட்டாயை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கொடுப்போம். அவ்வளவுதான்... எங்களோட கோரிக்கையை சுவாமிகள் ஏத்துக்கிடுவார். இப்படித்தான் சுவாமிகள் எங்களுடன் இருந்து ஆசிர்வதித்து வருகிறார்.''
ஆம்! கோடி சுவாமிகள் அருவமாக இருந்து தங்களைக் காத்து வருவதாக அவரது பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள். சுவாமிகளின் சமாதிக்கு அருகில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்களை மூடி, பிரார்த்தனை செய்கின்றனர். இன்னும் சிலர், மகா சமாதியில் உறையும் அவரிடம் பார்வையாலேயே பேசுகிறார்கள்; தங்களது சுக- துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தகவல் பலகை
தலம் : புரவிபாளையம்
சிறப்பு : ஸ்ரீகோடி சுவாமிகள் மகா சமாதி
எங்கே இருக்கிறது?: பொள்ளாச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கோவையில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து நடுப்புணி எனும் ஊருக்குச் செல்லும் நகரப் பேருந்து எண் 30, புரவிபாளையம் வழியாகச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்தால் ஸ்ரீகோடி சுவாமிகளின் சமாதி வந்து விடும்.
கோவையில் இருந்து பேருந்தில் பொள்ளாச்சி வந்தும் செல்லலாம். அல்லது வடக்கிப்பாளையம் பிரிவு என்கிற நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறியும் செல்லலாம். புதிதாக இங்கு வருபவர்கள், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து அங்கிருந்து செல்வதே உத்தமம். கார் மற்றும் இதர வாகனங்களில் கோவையில் இருந்து பயணிப்பவர்கள் கிணத்துக்கடவு வழியாக வந்து, வடக்கிப்பாளையம் பிரிவில் திரும்பி சூலக்கல், வடக்கிப்பாளையம் வழியாக புரவிபாளையத்தை அடையலாம்.

திருச்சிற்றம்பலம்

Friday, June 26, 2020

CORONO DEATH AND AFFECTED DETAILS AS ON 27.6.20

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:*

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்வு.*

*சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 49,690ஆக அதிகரிப்பு.*

*தமிழகத்தில் மேலும் 46 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 957 ஆக உயர்வு.*

*தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 41,357 பேர் குணமடைந்துள்ளனர்.*

Thursday, June 25, 2020

pyramid

#பிரமிடின் உண்மைகள்...

நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.

பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத செய்திகளை உள்ளடக்கியது. அய்நூறு அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்புப் பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.

இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், அத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று. புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பிதாகரஸ் என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரமிடின் உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.

இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுரத் துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள எந்திர மனிதனை (ரோபோட்)உள்ளே செலுத்தி உலகம் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டபோது. உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது. இவற்றைத் திறக்கவும் அதற்குப் பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வுக் குழுக்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.

அவற்றில் நழுவிச் சென்ற சில கணிதத் துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க அறிஞர் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய முடிகிறது. பிரமிடுகளும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போல கற்தூண் காலங்காட்டியாக[Megalithic Calendars] கருதப்படுகின்றன.

இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மம்மிப்படுத்துதல் பற்றி...

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.

2. உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

6. உடல், கல் உப்பால் மூடப்படும்.

7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும். அதன் பிறகு மரணக்கோவில் என்றழைக்கப்படும் லூசார் கோவிலின் பலிபீடத்தில் சில நாட்கள் வைப்பர். இது நேரடியாக சூரிய ஒளி படும் இடமாதலால் பாலைவன வெயிலின் வெப்பம் காரணமாக உடலின் ஈரப்பதம் முழுமையாக ஆவியாகி இப்போது காய்ந்த உடல் மாத்திரம் இருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.

9. உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன் படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.

Friday, April 17, 2020

MAHARISHI'S THOUGHT APRIL 18

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 18*

*பொருளும் நிகழ்ச்சியும்*

நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் வைத்திருக்கின்றீர்கள். அதையே நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். பேனாவைப் பார்த்து இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்ற வினா எழுப்புங்கள். கையினால் தொட்டு உணர முடிவதாலும் கண்ணால் பார்த்து உணர முடிவதாலும் பேனா ஒரு பொருள்தான் என்று கருத நேரும்.

மேலே செல்வோம். அந்தப் பேனாவை எரியும் நெருப்பிலிட்டால் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போகும். பேனா என்ற வடிவம் இப்போது அதற்கு இல்லை. பேனா எங்கே? அழிந்து விட்டது. இவ்வாறு அழிவது பொருளாகுமா? பேனா என்னவாயிற்று? ஆராய்வோம். 

நெருப்பிலிட்டவுடன் அதில் இணைந்திருந்த பலதரப்பட்ட அணுக்கள் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப் பெற்று இயக்க விரைவு பெற்று ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போயிற்று. அதனால் அணுக்கள் கூட்டால் அமைந்த பேனா என்ற வடிவம் மறைந்து போயிற்று. எது பேனாவாகக் காட்சியளித்தது? அணுக்கள். பேனா பொருளன்று. அணுக்கள் கூடிய ஒரு நிகழ்ச்சி தான் என்பது விளங்கக் கண்டோம். 

பேனா மட்டுமென்ன? நாம் காணும் இப்பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அத்தனையும் அணுக்களின் கூட்டு இயக்கம் தானே? ஒரு கூட்டுத் தோற்றமாக நாம் காணும் எப்பொருளிலும் ஒவ்வொரு அணுவும் தனித்தனியாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இடையில் உள்ள இடைவெளியைக் காணும் திறமை புலனறிவுக்கு இல்லை.

அதனால் ஒரே கொத்தாக ஒரு தோற்றம் காட்சியாகின்றது. இவ்வாறு இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் பிரபஞ்சத் தோற்றங்கள் அத்தனையும் நிகழ்ச்சிகளே என்ற முடிவுக்கு வருகிறோம். 

அடுத்து ஒரு வினா. எல்லாத் தோற்றங்கட்கும் அடிப்படைத் துகளான அப்பரமாணு பொருளா? நிகழ்ச்சியா? இதனையும் ஆராய்வோம். அப்பரமாணுவின் இயக்கத்தைக் கழித்து யார் அல்லது எது இயங்குகிறது என்று உணர்ந்து கொள்ளலாமல்லவா? அது தானே பொருளாக இருக்க முடியும்? பரமாணுவின் இயக்கத்தைக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சும்? ஒன்றுமேயில்லை. வெட்டவெளி தான் மீதி. 

அகன்று நின்று பூரணமாக இருக்கும் வெட்டவெளி என்ற பொருள் தான் நுண்ணிய இயக்கத்தில், கண்ட நிலையில் பரமாணுவாக இருக்கின்றது. இப்போது பொருள்நிலை விளங்குகிறதல்லவா? வெட்டவெளி என்ற ஒரு நிலையே பொருள் நிலையாகும். அதன் இயக்க நிகழ்ச்சியே பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுக்களின் கூட்டு அல்லது தொடர் நிகழ்ச்சியாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

MAHARISHI'S THOUGHT APRIL 17

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 17*

*உவமையின் எல்லை*

உவமையினால் உண்மைப் பொருளை உணர முடியுமா என்றால் உணர முடியாது. உவமையினால் பொருளின் அருகில் போகலாம்; ஆனால் அதை உணர முடியாது. அதனால் தான் வேதாந்தங்களையெல்லாம் உபநிஷத்துக்களாக மாற்றியபோது ”உபநிஷத்து” என்ற பெயர் வந்தது. “உபநிஷத்து” என்றால் “மிக அருகில் கொண்டு போய் வைப்பது” என்பது தான். சேர்த்து விடுவதே தவிர அதுவே உணர்த்திவிட முடியாது. 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் “இனிப்பு” என்பது எப்படி இருக்கிறது என்ற கேள்வியை போட்டுக்கொள்வோம். “இனிப்பு” என்றால் சர்க்கரை போல் இருக்கும். சர்க்கரை எப்படி இருக்கிறது? கொய்யாப்பழம் மாதிரி இருக்கிறது. இரண்டுக்கும் இனிப்பு என்று சொல்கிறீர்களே என்றால் மொழியில் அவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் இனிப்பு என்பதை எப்படியாகிலும் எடுத்துக்காட்ட முடியுமா? முடியவே முடியாது.

மாம்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். வாழைப்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். நூறு பழம் எடுத்தால் நூறு இனிப்பு என்று சொல்லிவிட முடியுமா? இனிப்பு என்ற இடத்தில் ஒன்றாகத்தான் தெரியும். வாழைப்பழ இனிப்புக்கும் மாம்பழ இனிப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இயலுமா? என்றால் இயலாது. அதையெல்லாம் அவரவர்கள் அனுபவித்து உணர்ந்த பிறகு தான் வாழைப்பழத்தைப் போல இருக்கும் என்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ள இயலும். 

ஆனால், அந்த இறைநிலையானது ஒன்றே ஒன்று தானே இருக்கிறது? அந்த ஒன்றே ஒன்றுக்கு எதனை உவமை காட்டுவது? உவமை காட்ட முடியாது. ஆகையினால் இவனே அதுவாகி அந்த நிலை அடைந்த அனுபவத்தில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Wednesday, April 8, 2020

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கானம காரணம் என்ன?' -

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கானம காரணம் என்ன?' -

*இந்த வரலாறு முக்கியம்* :

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர். எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.
-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
~விகடன்~

Monday, April 6, 2020

Apple director. Message

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

#வாழ்க்கையை_நேசியுங்கள்--------!
குழு நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள் மனம் இருந்தால் இதை பகிருங்கள் ஒரு செல்வந்தர் மனம் மாறினாலும் பத்து குடும்பங்களுக்கு உதவியாயிருக்கும் நன்றி நண்பர்களே🙏🙏🙏

Saturday, April 4, 2020

Maharishi thought April 4

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 4*

*ஓர் உலக ஆட்சி*

அரசியல் தலைவர்களாலோ, மதத் தலைவர்களாலோ பொருள்துறைத் தலைவர்களாலோ உலகில் அமைதி ஏற்படுத்திட முடியாது. ஏனெனில் இவர்கள் தனித்தன்மையில் எவ்வளவுதான் உயர்நோக்கம் உடையவர்களாக இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்க்கை நலத்தில் எல்லை கட்டிக் குழுவினர்கள் அளித்துள்ள பதவி, பணம், இவற்றிக்குக் கட்டுப்பட்டவர்கள்.

ஆகவே, ஆன்மீகத் துறையில் உலக மக்கள் அனைவரையும் பொறுப்புடன் இணைத்து நலம் காக்க ஆன்மீக நோக்குடைய ஒரு இயக்கம் தான் நேர்-நிறை உணர்வோடு உலக அமைதிக்கு வழிகாட்ட முடியும்.

நான் கொடுக்கும் திட்டமோ, மிகவும் எளிது; புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் இயல்பானது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரமளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதி மன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டமும், செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும்.

தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீர்ர்களின் சேவையையும், பின் தங்கிய நாடு, பின் தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம்.

ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பி விடப்பட்டால் 15 ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழமுடியும்.

உலகெங்கும் ஊர் வாரியாக, நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும், எந்தப் பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத் தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம்.

இந்தப் பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்; கூடுங்கள்; நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Saturday, March 14, 2020

பழனி மூட்டை சாமிகள்

🔱 *பழனி மூட்டை சாமிகள்* 🔱
       பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கணக்கன்பட்டி. சிறு கிராமம். இங்குள்ள டீக்கடை, மளிகைக்கடை, பஞ்சர் கடை, பெட்டிக்கடை என்று எல்லா கடைகளிலும் வீடுகளிலும் இவரது வண்ணப்படம் போட்ட நாட்காட்டி மாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து, அவர் முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இவரை 'பகவான் ஞான வள்ளல்' என்றும், 'சத்குரு' என்றும் அழைக்கிறார்கள். 'சித்தரின் அவதாரம் இவர்' என்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கிற போலிச் சாமியார்களையும், வேஷதாரிகளையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். எப்படி? பெரும்பாலும் பெண்கள் பிரச்னையில் சிக்குகிறார்கள். அடுத்ததாக, பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மாட்டிக் கொள்கின்றனர். ''ஆனால், மூட்டை சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர். மூட்டை சுவாமிகள் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை முறையே வேறு. நம்மிடம் இருக்கும் குறைகளை அகற்றுவதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார்.

எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.
பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

- இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''

மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமி மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.
தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் ..மகான்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கினார் . எங்கேயாவது சென்று உட்கார்ந்து கொண்டு எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

இந்த மகான் சமாதி அடைந்தது  (11 -03-2014)

..இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் எங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கணக்கம் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!
               🙏🏻நன்றி🙏🏻