Friday, June 28, 2019

மனைவி

மனைவி...

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
கரப்பான் பூச்சி அல்லது பல்லி
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூ வாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேச வேண்டும்
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும் போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா நான் அழகா
என்று அர்த்தம்.

நடக்கும் போது
என்னங்க என்றால்
விரலை பிடித்து கொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின் போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்றுதானே அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

*இவள்தான் மனைவி.*

*மழை வேண்டுமா? யாகம் நடத்துங்கள்!*

பூமியைப் பிளந்து
16 ஆயிரம் அடி
ஆழ் கிணறு தோண்டி
கச்சா எண்ணெயைக்
களவாடு..!

நிலத்தடி நீரை விசமாக்கி
நெல்வயலுக்கு நெருப்புவை..!

நெற்களஞ்சியத்தை
ஹைட்ரோகார்பனாக
மாற்றிவிடு..!

இப்போது
யாகம் நடத்து
அதுவும்...

"பர்ஜன்ய சாந்தி
வருண ஜபம் வேள்வி" நடத்து!
#மழைவரும்?

காட்டை அழித்து
பல்லுயிர்களை
வேட்டையாடு!

உல்லாச விடுதிகளை
உயர்த்திக் கட்டி
குடித்து கும்மாளமடி!

இயற்கையைச் சுரண்டி
கோடி கோடியாய்
கொள்ளையடி!

இப்போது
யாகம் நடத்து
அதுவும்...

நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி
பிராமனனை இறக்கி விடு!
#மழைவரும்?

மலையில் துளைப் போடு
அணுவைக் கொண்டு
அதைப் பிளந்தெறி..!

இயற்கை எழில் கொஞ்சும்
தேனியை சுடுகாடாக மாற்று!
அதற்கு நியூட்ரினோ
ஆய்வகம் என்று பெயரிடு!

இப்போது
யாகம் நடத்து!
அதுவும்...

சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய
ஏழாம் திருமறையை ஓது..!
#மழைவரும்?

ஆற்று மணலை அள்ளு!
சாய- சாக்கடை- தோல்
கழிவுகளை அதில் தள்ளு!

வழிபாடா?
திருவிழாவா?
சாவா?
சடங்கா?
எதுவாக இருந்தாலும்
ஆற்றையே இலக்கு வை!
அதை நஞ்சாக்கி
நாசமாக்கு..!
துடிதுடிக்க
அதன் குரல்வளையை
அறுத்தெறி..!

உன் சந்ததிக்கு
ஒரு சொட்டு நீர்கூட
கிடைக்காமல் பார்த்துக் கொள்!

இப்போது
யாகம் நடத்து!
அதுவும்...

நாதஸ்வரம்,
வயலின், புல்லாங்குழல்,
வீணை வாத்தியங்கள் முழங்க... அமிர்தவர்ஷினி
மேகவர்ஷினி
கேதாரி ஆனந்த பைரவி
ரூப கல்யாணி  ராகங்களை வாசித்துக் கொண்டே யாகம் நடத்து...
#மழைவரும்?

8 வழிச்சாலையில் உள்ள
7மலைகளையும் தின்று
ஏப்பம் விடு..!

கோடிக்கணக்கான மரங்களையும் , பல்லுயிர்களையும் வெட்டிச் சாய்த்து;
ஏரி குளத்தில் எரிமேடை கட்டிவை..!

தலைமுறை தலைமுறையாக
எமக்கு சோறு போட்ட நிலத்தை
வேரோடு பிடுங்கி எறி!

அதில் நீ போடும்
பளபளப்புச் சாலையில்
எம் உழவர்களை
அம்மணமாக அலையவிடு!
இப்போது
யாகம் நடத்து

அதுவும்!..!

"சிவபெருமானுக்கு
சீதள கும்பம் எனப்படும்
தாரா பத்திர நீர் விழா செய்!"

மகா விஷ்ணுவுக்கு
சிறப்பு திருமஞ்சனம்...

வருண சூக்த வேத
மந்திர பாராயணமும்...

வருண காயத்ரி
மந்திர பாராயணமும்
செய்து ஓது!
#மழைவரும்!

அதோடு...
காட்டையும்
கடலையும்
நீரையும்
நிலத்தையும்
வேட்டையாட...
கார்ப்பரேட்காரனுக்கு
எழுதிக் கொடு..!

கூடங்குளத்தையும்
தூத்துக்குடியையும்
புதைகுழியாக மாற்றிவிடு..!

சூயெஸ்க்கும்
எல்.என்.டிக்கும்
தண்ணீரைக்
தாரைவார்த்துக்
கொடுத்துவிடு..!

அப்படியே
அவன்காலை நக்கி,
சிந்தாமல் சிதறாமல்
அவன் கோமியத்தைப் பிடித்து
உலக உருண்டையில்
ஊற்றிக் கழுவு..!

உலகம் குளிர்ந்து விடும்!
மழையும் பொழிந்துவிடும்!

ஒன்றும் கவலைவேண்டாம்
எங்கள் ஆட்சியாளர்கள் , வாக்காளர்கள்,
குருடர்களாக...
செவிடர்களாக...
ஊமைகளாக...
அடிமைகளாக...
மூடர்களாக...
சூடு சொரனை அற்றவர்களாக
இருக்கும் வரை...!
உங்கள் காட்டில் மழைதான்!

நீங்கள் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை..!

எங்களுக்கு
மாட்டு மூத்திரமும்,

மாட்டுச் சானியும்
போதும்..!

#நீங்கள்
யாகம்நடத்துங்கள்!

நிச்சயமாக மழை வரும் !
www.kalaththil.com

Saturday, June 1, 2019

Meenakshi temple. Secrets

#நாசா_வியந்தது

ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..

ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.

நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!

ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.. ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!

சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்..

அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்.. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்.. காரணம் 965 என்பது விண்வெளியில்

தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.! வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..

புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை

அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.! மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!! நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம்

ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.. இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில் உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே.. அநேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம் அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம் உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!

இதைப் படித்ததும் தமிழரின் 💪💪💪 பெருமையை உலகறியச் செய்ய உங்கள் கரங்கள் துடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.! ஆகவே துடிக்கும் உங்கள் கரங்களை ஆட்டாமல் ஷேர் பட்டனில் கொண்டு போய் அமுக்கி நீங்கள் ஒரு ஆலமரத் தமிழன் என நிரூபியுங்கள்..

இதை அதிகம் பகிருங்கள் 💪